கோவை அருகே தனியார் நிறுவனத்தில் பணம் திருட்டு - ஊழியரை கைது செய்த போலீஸ்

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் சம்பளம் வழங்கவைத்திருந்த பணத்தை திருடி சென்ற ஊழியர் ஆல்பட்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.6.50 லட்சம் பணம் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய பகுதியில் வசித்து வரும் ராஜசிம்மா என்பவர் நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த 13-ம் தேதி தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக ரூபாய் 6,50,000/- பணத்தை ராஜசிம்மா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் மீண்டும் 14-ம் தேதி திரும்பிவந்து பார்த்தபோது, பெட்டியில் வைத்துச் சென்ற பணம் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து பணத்தை மீட்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஊழியரான ஆல்பர்ட்ராஜ் என்பவர் பணத்தை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆல்பர்ட்ராஜை தனிப்படையினர் கைது செய்து, அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 6,50,000/- மற்றும் டிவிஆர் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...