கோவை அருகே சாலையில் சென்ற காரில் தீவிபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் பசுபதி ஆகியோர் மருத்துவ தேவைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் கொண்டிருந்தனர்.



கணியூர் டோல்கேட் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அதில் தீப்பிடித்தது. மளமளவென காரில் தீ பரவியதால் அதிர்ச்சியடைந்த இருவரும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக வெளியே வந்தனர்.



கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.



இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சூலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், காரில் பயணம் செய்த இருவரும் பாதிப்புகளின்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து, கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் மற்றும் பசுபதி கோவை செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொடுத்தனர். காரில் தீபிடித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...