கோவை அருகே கத்தியால் குத்தி மனைவி கொடூரக்கொலை - தப்பியோடிய கணவனுக்கு போலீஸ் வலை

கோவை சூலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் தகாத உறவால் இந்தக் கொலை நடத்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கணேசன்.



இவர், நிவேதா (வயது24) என்ற பெண்ணை எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் தகாத உறவு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணேசன், மனைவி நிவேதாவை பல முறை எச்சரித்தும், அதை கேட்காமல் முருகனுடான உறவைத் தொடர்ந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், வேலை முடிந்து கணேசன் வீடு திரும்பியபோது, முருகனும் நிவேதாவும் தனிமையில் இருந்ததைப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். எச்சரிக்கையையும் மீறி தவறு செய்த மனைவி நிவேதாவை, கணேசன், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தினார்.

இதில், படுகாயமடைந்த நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.



அப்போது, நிவேதா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது கண்டு, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிவேதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.



கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய கணேசனைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...