வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநில பெண் ஊழியர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!

வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளி சீதாமுனிகுமாரியை சிறுத்தை ஒன்று தாக்கியதில், கை மற்றும் கால்களில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வடமாநில பெண் ஊழியர் ஒருவர் சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனிடையே அடிக்கடி சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநில தொழிலாளி சீதாமுனிகுமாரி (22), சிறுகுன்றா பகுதியில் உள்ள 35வது நம்பர் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



இந்நிலையில், காயமடைந்த வடமாநில பெண்ணை வால்பாறை வன துறையினர், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகரமன்ற துணை தலைவர் செந்தில்குமார், நகர துணை செயலாளர் சரவண பாண்டியன், வினோத்குமார், டேன்சிங், ஜெயராம் ஆகியோர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்டறிந்து வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...