வால்பாறையில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை - நகராட்சி தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்தின் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக பல கோடி மதிப்பில் 100-க்கும் மேற்பட்ட வேலைகள் செய்து வருகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.



அதை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.45 லட்சம் மதிப்பில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.



உடன் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம், 4ஆவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் 12ஆவது வார்டு உறுப்பினர் அன்பரசன் 17ஆவது வார்டு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...