பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு - திருப்பூரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவிகள்!

திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் மகிழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்தும், கைகளை கொடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கியது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 106 மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30,687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித் தேர்வுகள் 1,484 பேர் என மொத்தம் 32,171 பேர் தேர்வு எழுதினர்.



இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வானது நடைபெற்றது. இதனிடையே திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த மாணவ-மாணவிகள், ஒருவருக்கொருவர் கைகளை கொடுத்தும், கட்டி அனைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...