கோவை மேற்கு மண்டல பெண் காவலர்கள் இடையே துப்பாக்கி சுடும் போட்டி

தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மேற்கு மண்டல காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு இடைய துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது.

தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை (பொன்விழா ஆண்டு) கொண்டாடும் வகையில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்த பொன்விழா ஆண்டினை கொண்டாடும் வகையில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், தலைமையில் இந்த போட்டியானது நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்கள் வரை உள்ள பெண் காவலர்களான துப்பாக்கி சுடும் போட்டி கோவை மாவட்டம் மதுக்கரை மலையடிவாரத்தில் நடைபெற்றது.



இப்போட்டியில் சுமார் 170 பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...