அரிக்கொம்பன் யானை பரம்பிகுளத்தில் விடுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 10 பேரை கொன்று வீடுகளை சேதப்படுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதியில் விட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து பரம்பிக்குளம் wildlife warden அலுவலகம் முன்பு அனைத்து கட்சிகள் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: கேரளாவில் 10 பேரை கொன்ற அரிக்கொம்பன் யானையை பரம்பிகுளம் பகுதியில் விடுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானால் சாந்தன் பாறை ஆகிய பகுதிகளில் 16 ரேஷன் கடைகள் 60-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியும் மற்றும் 10 பேரை கொன்ற யானையைப் பிடித்து தமிழக கேரள எல்லைப் பகுதியான பரம்பிக்குளம் பகுதியில் விடுவதற்கான 5 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதைக் கண்டிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வனத்துறை மாவட்ட அலுவலக முற்றுகை போராட்டங்களையும் அப்பகுதி மக்கள் நடத்தி வந்தனர்.



இந்நிலையில் அரிக்கொம்பன் யானையை பரம்பிக்குளத்தில் விடுவதற்கு கண்டனம் தெரிவித்து 3-வது முறையாக அனைத்துக் கட்சிகள் சார்பாக இன்று பரம்பிக்குளம் wildlife warden அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டம் நெம்மாரா சட்டமன்ற உறுப்பினர் பாபு தலைமையில் அனைத்து கட்சி ஆதரவாளர்களுடன் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் போன்றவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் இப்பகுதியில் 10.மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் 600 குடும்பங்கள் 2500 மக்கள் வசித்து வருகின்றனர்.

அரிகொம்பனை பிடித்து இப்பகுதியில் விட்டால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் இப்பகுதி உள்ள பொதுமக்களும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் இப்பகுதியில் உள்ள மக்கள் சிறிய அளவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர் அதை இடிப்பதோடு பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு அச்சத்தோடு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

எனவே அரிகொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதிக்கு கொண்டு செல்வது என்ற நிபுணர் குழுவின் முடிவை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...