கிருஷ்ணகிரி ஆணவக்கொலையை கண்டித்து திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக தந்தையே மகனை கொலை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தந்தையே மகனை சாதி ஆணவக்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து, திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அருணாபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மகன் சுபாஷ் சாதி மறுத்து வேறு சாதியை சேர்ந்த காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கு சுபாஷின் தந்தை தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சொந்த ஊர் சென்ற சுபாஷை அவரது தந்தை தண்டபாணி சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார். உடன் வந்த அனுசுயாவையும் இதனை தடுத்த தண்டபாணியின் தாய் கண்ணம்மாவையும் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுபாஷ், கண்ணம்மா உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் அனுசுயா மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகம் முழுவதும் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...