கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.


கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ இன்று தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஷ்வரர் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். மேலும் இந்த வழக்கில் கோவை மாநகர போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை கடந்த ஆண்டு அக் 27 ல் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) க்கு மாற்றப்பட்டது. இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் கோவை மாநகரில் பொதுமக்கள் கூடும் ரயில்நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை சென்னை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், முகமது தல்ஹா, பைரோஷ், முகமது ரியாஷ், நவாஷ், அஷ்ரப் கான் ஆகியோர் மீது என்.ஐ.ஏ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...