இரும்பு உருக்காலையை எதிர்த்து 35வது நாளாக காத்திருப்பு போராட்டம் - உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது!

பல்லடம் அருகே இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி 35வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுப்பட்டியில் உள்ள இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பழைய இரும்பு பொருட்களை உருக்கும் இரும்பு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி அனுப்பட்டி கிராம மக்கள் கடந்த 35 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் பல்லடம் வட்டாட்சியர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில் ஆலை முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக கிராம மக்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆலையை தற்காலிகமாக மூடக்கோரி பல்லடம் வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.



இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதாகவும் நீர்நிலைகள் மாசு அடைவதால் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 35 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தும் ஆலை இயங்குவதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வடுகபாளையத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.



இந்த நிலையில் வடுகபாளையம் நால் ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று மாஸ் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட நான் இருக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

தனியார் இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்று கைதானவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் தனியார் மண்டபத்திலேயே காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.



காவல்துறையினர் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறியும் கிராம மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

மேலும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், காவல்துறை அதிகாரிகளுடன் மட்டும் பேசிவிட்டு எங்களை சந்திக்காமலேயே கிளம்பியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...