கோவை அருகே ஊருக்கு புகுந்த யானைக் கூட்டம்..! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்..!

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் காட்டு யானைக்கூட்டம் நுழைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் உலா வந்த யானைக்கூட்டத்தை வனத்துறையினர் உதவியுடன் அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இவைகள், உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய 8 காட்டு யானைகள் கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன.



இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரின் உதவியுடன், ஊருக்குள் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தை அப்பகுதி மக்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல நேற்று அதிகாலை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு ஒற்றை யானை புகுந்துள்ளது. கோடை வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதால், தண்ணீர் மற்றும் உணவுதேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...