கல்வியும், மருத்துவமும் இலவசாமாக வழங்கப்பட வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாநகர, கிழக்கு மண்டல முதல் மாநாடு சிங்காநல்லூர் அருகே உள்ள சக்கரை செட்டியார் நகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டினை பிரவீன் கொடியேற்றி துவங்கி வைத்தார்.

இம்மாநாட்டிற்கு எஸ்.ஆறுமுகம், கே.சி.மூர்த்தி, ஆர்.ஜீவபாரதி ஆகியோர் தலைமை வசித்தனர். ஜி.பி.சக்திவேல் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். கே.புருசோத்தமன் மற்றும் வே.வசந்தகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.பாலசந்திரன், பி.முருகன், வெ.ஜீவானந்தம், ச.பூர்ணிமா நந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக ஆர்.பிரகாஷ், செயலாளராக எஸ்.ஆறுமுகம், பொருளாளராக எம்.மணிகண்டன், துணைத்தலைவர்களாக ச.பூர்ணிமா நந்தினி, ஜே.ஸ்டாலின், வி.நாகராஜ், துணைச் செயலாளராக எம்.வீரசீனு, கே.காளிதாஸ், ஏ.விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில் கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசாமாக வழங்கப் படவேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். ஹோப் காலேஜ், சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையை கடக்க சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும். 



மேலும், கிழக்கு மண்டலப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட வேண்டும். அதேபோல பொழுதுபோக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே கடவில் உள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...