தாராபுரத்தில் பழமையான வேப்ப மரம் வெட்டிச் சாய்ப்பு - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 50 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.


திருப்பூர்: தாராபுரம் சி.எஸ்.ஐ. நகரில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று சாலையோரம் இருந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு நிழல் தந்துவந்தது. இந்த மரத்தின் நிழலில் அப்பகுதி பொதுமக்கள் இளைப்பாரி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த வேப்பமரத்தை ஒரு சிலர் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். பொதுவாக வருவாய்த்துறையினர் முன்அனுமதி பெற்று மரத்தை வெட்ட வேண்டும். ஆனால், தாராபுரம் பகுதியில் பல இடங்களில் இது போன்ற மரங்களை வெட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.



தமிழக அரசு வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், 50ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவது கொடூரமான செயல் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், தாராபுரம் வருவாய் துறையினர் சாலை மற்றும் தெருவோரம் உள்ள மரங்களை வெட்டி கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.



50 வயதான இந்த வேப்ப மரம் வெட்டப்பட்ட சம்பவம் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது,

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...