வால்பாறையில் சிறுத்தை தாக்குதலுக்கு ஆளான வடமாநில தொழிலாளி- வனத்துறை சார்பில் நிதியுதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வடமாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக ரூ.2 ஆயிரத்தை வனத்துறை சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்பவரை சிறுத்தை தாக்கியது.

அதில் கை கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்ணை, வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, 17வது வார்டு உறுப்பினர் மணிகண்டன்,12 வார்டு உறுப்பினர் அன்பரசன் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.



இதனிடையே, வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், சிறுத்தை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வட மாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரியை நேரில் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2000-யை வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...