அதிமுக பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் - தாராபுரத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். தாராபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



திருப்பூர்: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகரித்தது. இதை, தமிழகத்தில் உள்ள அதிமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் செயலாளர் பங்க் மகேஷ் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர், அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...