வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநிலத்தொழிலாளர் காயம் - கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் அனில் ஓரான் என்ற வட மாநில தொழிலாளர் காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று 35 வது தேயிலை த்தோட்ட பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளியை சிறுத்தை தாக்கியது லேசான காயங்களுடன் தப்பினார்.

இன்று அதே 35 வது தோட்டப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளரான அனில் ஓரான் (வயது 26). இவரை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை காலில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.



அப்பகுதியில் ஆய்வுக்காக சென்றிருந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி சிறுத்தை தாக்கியவரை காப்பாற்றி, அவரது வாகனத்தில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.



காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவும் ஏற்பட்டதால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அனில்ஓரான், கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

வால்பாறை அருகே உள்ள கூழாங்கல் ஆறு, சிறுகுன்றா நல்ல காத்து போன்ற எஸ்டேட் பகுதிகளில் பகுதிகளில் வால்பாறை பகுதியில் வளர்க்கப்படும் 100 க்கு மேற்பட்ட மாடுகள், தேயிலை த்தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. அந்த மாடுகளை சிறுத்தைகள் வேட்டையாடுவதால், ஆங்காங்கே தேயிலை தோட்டத்தில் மாடுகள் இறந்து கிடக்கின்றன.

இதை, சிறுத்தை சாப்பிட வரும்பொழுது மனிதர்கள் அப்பகுதியில் வேலைக்கு வந்தால், அவர்களையும் சிறுத்தை தாக்குகிறது. இதனால், வீட்டில் வளர்க்கும் மாடுகளை தேயிலைத்தோட்டத்தில் விடாமல் தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...