லஞ்சம் கொடுக்காத விவசாயிகள் மீது பொய்வழக்கு - உடுமலை குறைதீர்க் கூட்டத்தில் புகார்

உடுமலையில் லஞ்சம் கொடுக்க மறுத்தால், விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மைவாடி கிளை கால்வாய் மூலம் பாசன வசதி பெற்றுவரும் விவசாயி நடராஜ்மீது, வேண்டுமென்றே பாசன சபை தலைவர் செல்லமுத்து, உடுமலை கால்வாய் உதவி செயற்பொறியாளர் விஜய் சேகரன் ஆகியோர் தண்ணீர் எடுத்ததுபோல் புகைப்படம் எடுத்து இருபதாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகின்றது.



இந்நிலையில், லஞ்சப் பணம் கொடுக்காத நிலையில் தற்போது விவசாய நடராஜ் உட்பட நான்கு பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.



மேலும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் மாதம் தோறும் கொடுக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, முக்கிய அதிகாரிகள் யாரும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை, சில வாரங்களாக விளை நிலங்களை காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது, விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட வனத்துறையிடம் தகவல் தெரிவித்தாலும் எதையும் கண்டு கொள்வதில்லை, உடுமலை பகுதியிலிருந்து சட்ட விரோதமாக கேரளாவுக்கு அதிக அளவு கனிம வளங்கள் திருடப்பட்டு வருவதால் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல பிரச்சனைககளை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...