முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா - பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வன விலங்குகள் உணவுதேடி சாலை ஓரத்திற்கு வருவது அதிகரித்து உள்ளது. அவற்றை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. புலிகள், காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

தற்போது கோடை காலம் என்பதால், வனவிலங்களுக்கு குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெற தொடங்கியுள்ளன.



குறிப்பாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு தேடி மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலைக்கு வரத் தொடங்கியுள்ளன.



சாலை ஓரத்தில் உள்ள புற்களை மேயும் இந்த வனவிலங்குகளை, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



குறிப்பாக, சாலை ஓரத்தில் சுற்றி தெரியும் ஆண் மயில்கள், அடிக்கடி பெண் மயில்களை கவரும் வகையில் தோகை விரித்தாடுவதை ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...