மேட்டுப்பாளையம் அருகே கிராமத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு

மேட்டுப்பாளையம் அருகே திம்மராயம்பாளையம் கிராமத்தில் புகுந்த மலைப்பாம்பை, நீண்ட நேரம் போராடி பாம்புபிடி வீரர் காஜாமைதீன் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள திம்மராயம்பாளையம் சுதா நகரில் ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பினை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர்.

தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சிறுமுகையை ஒட்டியுள்ள அடர் வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது. இதுகுறித்து பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் கூறுகையில், திம்மராயம்பாளையம் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி மான், பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவே வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கி உள்ளன.

தற்போது பிடிப்பட்டுள்ள மலைப்பாம்பு 8 அடி நீளம் கொண்டது.சுமார் 10 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு சிறுமுகை வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...