12 மணி நேரம் வேலை - கோவையில் ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தனியார் நிறுவனங்களில் 8 மணி நேரத்திலிருந்து 12மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தியதை கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமையில் ஏஐடியுசி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் முன்பு ஏஐடியுசி சார்பில் தனியார் நிறுவன வேலை நேர உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 கைவிட வலியுறுத்தியும், எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதை திரும்ப பெற வலியுறுத்தியும், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...