கோவை துடியலூரில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவை துடியலூரை அடுத்த வடமதுரையில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிவகுமார், மண்டல தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.



கோவை: துடியலூர் பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோவை துடியலூரை அடுத்த வடமதுரை பேருந்து நிறுத்தம் பகுதியில் பாஜக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் வர்த்தக அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிவகுமார், மண்டல தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

குருடம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுரேஷ் குமார் மற்றும் சாவித்திரி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நீர்மோர் பந்தல் தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இருக்கும்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூறும்போது, இந்த வருடம் வெயில் அதிகமாக உள்ளது. மேலும் 4 டிகிரி வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக வானிலை துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் பயன்படும் வகையில் நீர்மோர் பந்தலை பாரதிய ஜனதா கட்சியினர் திறந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் வந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நீர்மோர் பந்தலில் மோர் குடித்து தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டனர்.

Newsletter

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...