கோவையில் மருமகளை தாக்கிய மாமனார், மாமியார் மீது வழக்கு!

பொள்ளாச்சி வடக்குத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனப்ரியா(33). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சான்றிதழ் எடுக்க கணவர் வீட்டிற்கு வந்த மோகன பிரியாவை மாமனார், மாமியார் தாக்கியதால் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: மகாலிங்கபுரத்தில் மருமகளை தாக்கிய மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன பிரியா (33). இவர் கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களாக மோகனப்பிரியா கணவரை பிரிந்து பொள்ளாச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தனது கணவரது வீட்டில் உள்ள கல்லூரி படிப்பு சான்றிதழ்களை எடுக்க நேற்று மோகன பிரியா வெள்ளலூர் வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த மோகனபிரியாவின் மாமனார் மாதையன் (68), மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் மோகனப்பிரியாவை தகாத வார்த்தைகளால், பேசியதோடு அவரை தாக்கியுள்ளனர்.

இதில் முகத்தில் காயமடைந்த மோகனப்பிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோகனப்பிரியா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் மாமனார் மாதையன் மற்றும் மாமியார் விஜயலட்சுமி மீது போத்தனூர் போலீசார் பெண் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...