கிணத்துக்கடவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை - பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் 6 பேருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகா சூலக்கல் பகுதியில் பள்ளி, கோவில் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ராவுக்கு புகார் வந்தது.



இதையடுத்து, சூலக்கல் பகுதியில் சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல், மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், இன்பரசன், ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் பெட்டி கடைகள், பேக்கரிகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை விற்பனை செய்ததும், கடைகள் முன்பு புகைப்பிடிக்க அனுமதி அளித்ததும் தெரியவந்தது.



இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் 6 கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...