கோவை அருகே பக்தர்களின் வாகனத்தை வழிமறித்து நின்ற காட்டுயானை கூட்டம் - வைரலாகும் வீடியோ!

கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஜீப்பில் சிலர் சென்றபோது, வழியில் இரண்டு குட்டியானைகளுடன் வந்த 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறித்தவாறு நின்றது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் ஆங்கங்கே நின்றன. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.



கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இரவு நேரங்களிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவர். சில சமயங்களில் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இரவு நேரங்களில் மலையேற கூடாது என தெரிவித்தால் இரவு முழுவதும் மலை அடிவாரத்திலேயே தங்கி விட்டு அதிகாலையில் மலையேறுவர்.

இந்நிலையில் நேற்று இரவு வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஜீப்பில் சிலர் சென்று கொண்டிருக்கையில், வழியில் இரண்டு குட்டியானைகளுடன் வந்த 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறித்தவாறு நின்றது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் ஆங்கங்கே நின்றன.

வாகன ஓட்டிகளும் யானைகளுக்கு தொந்தரவு அளிக்காமல் இருக்க ஒலிபெருக்கிகளை எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்.



சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானைகள் சாலையிலேயே நின்றுள்ளன. இதனையடுத்து வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனிடையே ஜீப்பில் இருந்த ஒருவர் அவரது செல்போனில் யானைகளை வழிமறித்து நின்றதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இரவு நேரங்களிலும் பக்தர்கள் வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்வதால் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க, வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...