கோவையில் மதநல்லிணக்க ரமலான் கொண்டாட்டம் - இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு!

கோவையில் ரமலான் பண்டிகையையொட்டி, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தொழுகையில் ஈடுபட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியே வருந்த இஸ்லாமியர்களுக்கு மடாதிபதி, பாதிரியார் உள்ளிட்டோர் பூ, குளிர்பானம், இனிப்பு வழங்கி உபசரித்து ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.



கோவை: கோவையில் மத நல்லிணக்க ரமலான் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 30 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமியர்கள், புனித மாதமான ரமலான் மாதத்தில் ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.



பிறை பார்த்து இறை தொழுவும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையான இன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். கோவையில் உக்கடம், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் ஆறத்தழுவி அன்பை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



இந்த நிலையிலே, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பூ மார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மத நல்லிணக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.



ரமலான் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு இந்து மடாதிபதி, கிறிஸ்துவ பாதிரியார், இஸ்லாமிய இமாம் என மும்மதத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள், அமைப்பை சார்ந்தவர்கள் பூ, குளிர்பானம் தந்து, இனிப்பு வழங்கி உபசரித்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோவையில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளை மத நல்லிணக்க பண்டிகைகளாக மூன்று மத பிரதிநிதிகளுடன் கொண்டாடும் நிலையில், இந்த வருடமும் மத நல்லிணக்க ரம்ஜான் கொண்டாடியதாக விழா ஏற்பாட்டாளரான பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரான ஹாஜி. ஜெ. முகமது ரஃபிக் தெரிவித்தார்.

சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாக, மதநல்லிணக்கம் பேணி அமைதி நிலை ஏற்பட்டு, மக்கள் எல்லா வளமும் நலமும் பெற பிரார்த்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற மத நல்லிணக்க பண்டிகையை கொண்டாடுவதாகவும், மதங்கள் வேறாயினும் மனம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த மதநல்லிணக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...