தாராபுரத்தில் ரம்ஜான் கொண்டாட்டம் - இஸ்லாமியர்கள் கூட்டுத்தொழுகை!

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி, தாராபுரத்தில் இறைச்சி மஸ்தான் இதுகா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.


திருப்பூர்: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நேற்று பிறை தெரிந்ததை முன்னிட்டு இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுங்கம் அருகே அமைந்துள்ள இறைச்சி மஸ்தான் இதுகா மைதான திடலில் தொழுகை நடைபெற்றது.



பெரிய பள்ளி தலைமை அஜரத் மீரான் கனி மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர் சிறுமிகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உலக மக்கள் அமைதிக்காகவும் நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.



கடந்த 30 நாட்கள் நோன்பிருந்து இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.



இதைத் தொடர்ந்து, ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...