புதர் மண்டி கிடக்கும் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலக ஓடுபாதை - சீரமைக்க வலுக்கும் கோரிக்கை!

உடுமலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைக்காக அமைக்கப்பட்ட ஓடுபாதை பராமரிப்பில்லாமல் புதர் மண்டி, செடிகள் முளைத்துள்ளதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஓடுபாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலமாக புதிதாக ஓட்டுனர் உரிமம் எடுத்தல், புதுப்பித்தல், வாகன தகுதி சான்று, வாகனப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.



இந்த அலுவலக வளாகத்தில் ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. மேலும், செடிகள் முளைத்து பராமரிப்பு இல்லாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்பட்டதன் காரணமாக சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியூருக்கு சென்று சேவையை பெறுவதில் ஏற்பட்டு வந்த காலதாமதம் நிவர்த்தி அடைந்தது.

அலுவலக வளாகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட ஓடுபாதையானது, முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் பாதையை சுற்றிலும் புதர் மண்டி, செடிகள் முளைத்து காணப்படுகிறது.

இதனால் அங்கு விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஓடுபாதையை பராமரிப்பு செய்தும், அதை சுற்றி முளைத்துள்ள புதர் மற்றும் செடிகளை அகற்றவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...