உடுமலையில் ஏ.டி.எம் மையத்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு - குடிமகன்கள் அட்டகாசம்!

உடுமலை அருகேயுள்ள பசுபதி வீதியில் செயல்பட்டு வரும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளையின் ஏடிஎம் மையத்தின் முன் பக்க கண்ணாடியை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்த மதுப்பிரியர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே பசுபதி வீதியில் உள்ள ஏடிஎம் மையத்தின் முன்பக்க கண்ணாடியை மதுப்பிரியர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளை பசுபதி வீதியில் உள்ளது. இந்த வங்கி கிளையில், 500க்கும் மேற்பட்டவர்கள் கணக்கு வைத்துள்ள தோடு, நகை கடன், பயிர் கடன் பெறவும், பரிவர்த்தனை மேற்கொள்ளவும், ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று வழக்கம் போல் வங்கியை, அலுவலர்கள் மூடிச் சென்றனர். இன்று காலை திறக்க வந்த போது வங்கியின் முன் உள்ள ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி உடைந்து கிடந்தது.

வங்கிக்கு எதிரில் பசுபதி வீதி யில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவிலும் மது விற்பனை முறைகேடாக நடந்து வருவதால், போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறியுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு, போதை ஆசா மிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

அரசு மதுபானக் கடையை மாற்ற வேண்டும். என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து,ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடியை உடைத்து திருட முயற்சியின் காரணமாக, பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...