ரமலான் பெருநாளை ஒட்டி துடியலூரில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை!

ரமலான் பெருநாளை ஒட்டி கோவை துடியலூர் ஹிதாயத்துள் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வடமதுரை எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில் திடல் தொழுகை நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.



கோவை: ரமலான் பெருநாளை ஒட்டி கோவை துடியலூரில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ரமலான் பெருநாள் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு வைத்து இன்றைய தினம் ஷவ்வால் பிறை 1 ல் கொண்டாடப்படும். இந்த பெருநாளானது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் ஓர் சிறந்த பண்டிகை ஆகும்.



ஈதுல் பித்ரு தொழுகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வரும் சூழலில், கோவை மாவட்டம் துடியலூர் ஹிதாயத்துள் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வடமதுரை எஸ்.எஸ். கமலேஷ் திருமண மண்டபத்தில் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் என சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.



துடியலூர் பள்ளிவாசல் செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகைக்கு இமாம் சாஹிர் ஜைனி தொழுகவைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இமாமிற்கு பள்ளிவாசல் தலைவர் சுல்தான் மைதீன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் பொருளாளர் கனி மேற்பார்வையில் நடைபெற்றது.



மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சுற்று வட்டார பகுதி இஸ்லாமியர்கள் மார்க்க அறிஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்கள் தொழுகையை நிறைவேற்றி அதன் பின்னர் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டி அணைத்து பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...