கோடை காலத்தை முன்னிட்டு உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உள்ள உடுமலை ரயில் நிலையம் வழியாக கூடுதல் ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த வழித்தடம். அகலபாதையாக மாற்றப்பட்ட பின், தற்போது குறைந்த அளவிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை பாலக்காடு மதுரை, திருச்செந்தூர், பாலக்காடு சென்னை, திருவனந்தபுரம், மதுரை செல்லும் ரயில்கள் மட்டும் தற்போது இயக்கப்படுகின்றன. உடுமலை பகுதியில், தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தொழிற்சாலை, நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்லவே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் செல்ல போதுமான ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவது இல்லை. அதனால், அவர்கள் அதிக செலவு செய்து பேருந்துகள், சொகுசு பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆகையால் கோடை விடுமுறை துவங்கும் நிலையில். மாணவர்கள், பொதுமக்கள் சுற்றுலா செல்ல விரும்புவோர் தற்போது இயக்கப்படும் ரயில்களில் செல்வதில், மிகுந்த சிரமம் ஏற்படும்.

எனவே, பொதுமக்கள், வெளி மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில், கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூடுதல் ரயில் இயக்கினால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

பொது மக்களும், பயணிகளும் அதிக அளவில் பயன்பெறுவார்கள். எனவே, உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என, உடுமலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...