பல்லடம் அருகே பெய்த திடீர் மழையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - 2 வீடுகள் முற்றிலுமாக சேதம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் திடீரென பெய்த மழையால் சுற்றுச்சுவர் 200 மீட்டர் தூரத்திற்கு இடிந்து விழுந்த விபத்தில் 2 வீடுகள், 2 மாட்டு கொட்டகைகள் மற்றும் 5 கழிப்பறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் பகுதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 வீடுகள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே விற்பனைக்காக தனியார் வீட்டுமனை தயாராகி வருகிறது.



இதனிடையே அதை சுற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று மாலை அப்பகுதியில் திடீரென பெய்த மழையில் வீட்டுமனைக்கு அருகே அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரானது சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு முழுமையாக இடிந்து விழுந்தது.



இந்த சுற்றுச்சுவரானது, செட்டி என்ற மூதாட்டிக்கு சொந்தமான வீட்டின் மீது விழுந்ததில் வீடு முழுவதுமாக இடிந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்.



இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து கழிப்பறைகள், இரண்டு மாட்டு கொட்டகைகள் மற்றும் இரண்டு வீடுகள் முழுவதுமாக இடிந்து சேதமடைந்தன.

சுற்றுச்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.



சிவராஜ், விநோத், ரங்கசாமி, பிரபாகரன், ரத்னா, ரமேஷ், கணேசன், தங்காள், சதீஷ், பொன்னுசாமி, அஞ்சனா ஆகியோரின் வீடுகளில் சூறாவளி காற்று சிக்கி மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.



மேலும் குடியிருப்புக்கு அருகே கட்டப்பட்டுள்ள சுற்று சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததாகவும் பலமுறை வீட்டுமனை விற்பனையாளரிடம் தெரிவித்தும் மெத்தனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என‌ அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. வீதிகளிலேயே மின் கம்பிகள் தொங்கியபடி உள்ள நிலையில் மின்வாரிய அதிகாரிகள் பாதிப்பை சரி செய்ய வேண்டும். தங்க இடமில்லாமல் வீதியில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...