திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனர் கணபதி (55) கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த போது, திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை காண்பிக்க இறங்கிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). லாரி ஓட்டுநரான இவர் நேற்று மதியம் வழக்கம் போல் கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரியில் டீ தூள் லோடு ஏற்றிக்கொண்டு கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், திருமலையம்பாளையம் அருகேயுள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுப்பதற்காக லாரியை விட்டு இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்த சக லாரி ஓட்டுநர்கள் கணபதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணபதி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

லாரி ஓட்டுநர் கணபதி மரணம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுக்க வந்த லாரி ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...