உதகையில் களைகட்ட தொடங்கிய கோடை சீசன் - சுற்றுலா தலங்களில் குவியும் பயணிகள்!

உதகையில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.


நீலகிரி: உதகையில் கோடை சீசன் களைகட்ட தொடங்கி உள்ள நிலையில், சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.



மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.



அதன்படி, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



குறிப்பாக ரம்ஜான் பண்டிகை நிறைவடைந்ததை அடுத்து கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகையால் தாவரவியல் பூங்காவில் சீசன் களைகட்டி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...