சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் உள்ள VIBE தான் கோயமுத்தூர் - நடிகை பிரியா பவானி சங்கர்

கோவை அடுத்த மருதமலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிவேதா கிராண்ட் என்ற ஹோட்டலை திறந்துவைத்த நடிகை பிரியா பவானி சங்கர், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வரவேற்பு கிடைப்பது நல்ல விஷயம் தான் என்றும், பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் திரைப்படத்தை ரசிக்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மருதமலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ஹோட்டலை நடிகை பிரியா பவானி சங்கர் திறந்து வைத்தார்.

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, மருதமலை பகுதியில் Nivetha Grand என்ற ஹோட்டலை கட்டியுள்ளார்.



இன்று அந்த ஹோட்டலின் திறப்பு விழா நடைபெற்றது. இதனை நடிகை பிரியா பவானிசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த முறை வரும் பொழுது இங்கு தங்குவது போல் வருகை புரிய முயற்சிக்கிறேன்.

பட்ஜெட் குறைவான நல்ல படங்களுக்கும் வரவேற்பு கிடைப்பது ஆரோக்கியமான விஷயம் தான். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும், Nothing less than Better தான். படம் எப்படி இருக்கும் என அனைவருக்கும் தெரியும் நாம் என்ன அனுபவிக்க போகிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

கோயமுத்தூர் அனைவருக்கும் பிடித்த ஊர். சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் உள்ள ஒரு Vibe தான் கோயமுத்தூர். தற்போது கோவையில் வெயில் அதிகமாக தான் உள்ளது. ஆனால், சென்னையை காட்டிலும் கோவையில் குறைவாகத்தான் வெயில் உள்ளது.

இந்த நிகழ்வில் மருதமலை சேனாதிபதி, அவரது மகள் நிவேதா (கவுன்சிலர்) மற்றும் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை சீர் செய்து ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...