பல்லடம் அருகே ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்!

திருப்பூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் "வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ்" என்ற சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தை மங்கலம் மற்றும் பல்லடம் பகுதி காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று திறந்து வைத்தனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இன்று திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் "வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ்" என்ற சர்வதேச தரத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இன்று திறக்கப்பட்டது.



மங்கலம் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், பல்லடம் காவல் துணை ஆய்வாளர் ராஜன், திருப்பூர் மாவட்ட ஸ்கேட்டிங் சங்கத்தின் செயலாளர் தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



மேலும் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் ஸ்கேட்டிங் அணி வகுப்பினை துணை காவல் ஆய்வாளர் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்தில் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றி வந்தனர்.



இது குறித்து வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ் இன் நிறுவனர் காமராஜ் பேசியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக பல்லடம் அருகே ஊஞ்ச பாளையத்தில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்கேட்டிங் மைதானம் திறக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்று திருப்பூர் மாவட்டம் முழுக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானங்கள் திறக்கப்பட வேண்டும். மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் பல்லடம் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிய இந்த மைதானம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...