கோவை இடிகரை மாரியம்மன் கோவில் திருச்சாட்டு திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை இடிகரை அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருச்சாட்டு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பூவோடு எடுத்து சாட்டையால் அடித்துக் கொண்டு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: இடிகரை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூவோடு எடுத்தும், சாட்டையால் அடித்துக் கொண்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கோவை இடிகரையில் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருச்சாட்டு திருவிழா கடந்த 18ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இதில் மணியகாரம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலிலிருந்து கம்பம் அழைத்தல், கம்பம் நடுதல், பூவோடு வைத்ததைத் தொடர்ந்து பக்தர்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிலையில், திருவிழாவின் முக்கிய விழாவான அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கரகம் அழைத்தல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...