துடியலூரில் செயின்பறிப்பு - இளைஞரை கைது செய்த தனிப்படை போலீஸ்

கோவை துடியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.


கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி (வயது43).

இவர் கடந்த மார்ச் 20ஆம் தேதி, தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் துடியலூர் தனிப்படை போலீசார் கோவையில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த முருகானந்தம் (வயது26) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் வேறு எங்காவது செயின் பறிப்பில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...