ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் வருமானவரித்துறை ரெய்டு - கோவை உட்பட 50க்கும் இடங்களில் சோதனை

தமிழகம் முழுவதும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். கோவை, சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.


கோவை: தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் நடத்திவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலும் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீதான புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்தார். இதற்கு அந்நிறுவனமும் விளக்கமளித்திருந்த நிலையில், இன்று வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...