பன்றிக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை கோரி முகமூடி அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

மக்கள் குறை தீர்ப்பு முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முகமூடி அணிந்து மனு அளிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக கோவையில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்த பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

மேலும், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருபவர்களை விரைவாக சோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து வந்ததால் அப்பகுதீயில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...