மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம் - 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த உடுமலை மாணவர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய்குமார் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இவரது உடல் உறுப்புகள், கோவை மற்றும் சென்னையை சேர்ந்த 8 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் அஜய் குமார் உடுமலைப்பேட்டையில் உள்ள வித்யசாகர் கல்லூரியில் எம்.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கல்லூரி சென்ற மாணவர் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அங்கு சிகிச்சை பலனில்லாமல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர், பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மேல்சிகிச்சை பலனில்லாமல் அஜய்குமார் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து, அவருடைய உடலில் இருந்து எட்டு உறுப்புகள் சென்னைக்கு விமான மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒரு கிட்னி மற்றும் நுரையீரலின் பகுதியை பி எஸ் ஜி மருத்துவமனை பயன்படுத்திக் கொள்வதாகவும், மீதமுள்ள உறுப்புகள் அனைத்தையும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளைச் சாவடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகளின் மூலம் எட்டு பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடுமலையில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...