பல்லடம் அடுத்த அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு - போட்டி ஏற்பாடுகளை ஆட்சியர் வினீத் நேரில் ஆய்வு!

அலகுமலை கிராமத்தில் நாளைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் நாளை போட்டி நடக்கிறது. போட்டிக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள அலகுமலை கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில், போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வினித் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அலகுமலை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் போட்டி நடத்துவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இதனிடையே அலகுமலை கிராமத்தின் ஒரு தரப்பு கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, அழகுமலை ஊராட்சி தலைவர் தூய மணி என்பவர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மூன்று முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நீதிபதிகள் வழக்கை மூன்று முறையும் தள்ளுபடி செய்தனர்.

உயர் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கிய நிலையில் நாளை (25.04.2023) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளும் கலந்து கொள்ள உள்ளது. இதுவரை மாடுபிடி வீரர்கள் 560 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 650 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.



ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

மேலும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில், ஆயிரக்கணக்கான போலீசார் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



மேலும், பார்வையாளர்களுக்கான மேடைகள், அவசர உதவிக்கான அறைகள், காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை செய்தி துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, காளைகளுக்கு ஊக்க மருந்துகளோ எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ செலுத்தக்கூடாது எனவும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் வாடிவாசல் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கிவிட்டு காளைகளுக்கு வழங்க வேண்டிய டோக்கன்களை கட்சி பிரமுகர்களுக்கு ஜல்லிக்கட்டு பேரவையினர் வழங்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், மதுரை பகுதியில் உள்ள காளைகளுக்கு டோக்கன் வழங்கி உள்ளார்கள். உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்கவில்லை எனவும் கூறிய மாடு வளர்ப்போர், இது குறித்து ஜல்லிக்கட்டு பேரவையில் உள்ளவர்களிடம் கேட்டால் இன்று, நாளை என இழுத்தடிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

உள்ளூர் மாடுகளுக்கு டோக்கன் வழங்காவிட்டால் காளைகளுடன் நாளை கருப்புக் கொடி காட்டுவோம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...