உடுமலை குட்டை திடல் பகுதியில் குப்பைகள் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா முடிவடைந்து ஒருவாரக் காலமாகியும், குட்டைத்திடல் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அல்லாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் விரைந்து குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளர்.


திருப்பூர்: குட்டைத்திடல் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் உள்ள குட்டைத்திடலை சுற்றி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காவல் நிலையம், கோயில்கள் உள்ளன. காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் வாக்கிங் செல்லவும், இளைஞர்கள் விளையாடவும் வருகின்றனர்.



இந்நிலையில் மாரியம்மன் திருவிழா முடிந்து ஒரு வாரமாகியும் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. நூலகத்தின் பின்னால் உள்ள சுற்றுச்சுவர் வரை தாண்டி குப்பை குவிந்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.



இது பற்றி விசாரித்த போது, நகராட்சி நிர்வாகத்துக்கும், வருவாய்த்துறைக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே குப்பைகள் அள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. அதாவது திருவிழாவுக்கு குட்டைத்திடல் ஏலம் மூலம் கிடைக்கும் தொங்க வருவாய்துறைக்குச் செல்கிறது. இந்த ஆண்டு ரூ.60 லட்சத்துக்கும் மேல் ஏலம் போனது.

எனவே வருவாய் ஈட்டும் அவர்களே குப்பை களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது.ஆனால், வருவாய்துறையினரோ குப்பைகளை அகற்றும் பணி எங்களுடையது அல்ல, நகராட்சி நிர்வாகம் தான் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றனர்.

இருதுறைகளின் ஈகோ காரணமாக, உடுமலை நகரின் மையப்பகுதி முகம் சுழிக்கும் வகையில் காட்சி அளிக்கிறது. உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...