எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் வேண்டாம்..! - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை!

திருப்பூர் அருகேயுள்ள அ. குரும்பபாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


திருப்பூர்: டாஸ்மாக திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சிக்குட்பட்ட அ. குரும்பபாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், விவசாயத் தொழிலை நம்பி உழவர் உற்பத்தியாளர் குழு என்ற விவசாயம் சார்ந்த குழுவை ஆரம்பித்து மகளிர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.



இதனிடையே இப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டிய அப்பகுதி பொதுமக்கள், இக்கிராமத்தைச் சுற்றி ஐந்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருவதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலவி பயின்று வரும் நிலையில டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் அமைந்தால் இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

அதேபோல் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்புள்ளதாகவும், ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியரின் இடத்தில் இந்த டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் அமைய இருப்பதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என்றும், அதையும் மீறி அனுமதி கொடுக்கும் பட்சத்தில், இப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...