சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு - கோவையில் ஏப்.26-ல் கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடிக்க முடிவு!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து வரும் 26 ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள மாநில அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.



சிறுவாணி அணைக்கும் செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி அருகே கேரளா அரசு இரண்டு தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் தடுப்பணையை அகற்ற கோரியும் சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் கேரள அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, விசிக, தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில், வரும் 26 ஆம் தேதி, கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...