அலகுமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாயும் காளைகள்.. பாய்ந்து பிடிக்கும் காளையர்கள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 650 காளைகளும் போட்டியில் பங்கேற்றுள்ளன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள அலகுமலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அப்பகுதி கிராம மக்கள் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் போட்டி நடத்துவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் ஊர் மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் மாடுபிடி வீரர்கள் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து அலகுமலை ஊராட்சி தலைவர் தூய மணி என்பவர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மூன்று முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்றம் வழக்கை மூன்று முறையும் தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கிய நிலையில், இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில், சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளும் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை மாடுபிடி வீரர்கள் 560 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 650 காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



ஜல்லிக்கட்டு போட்டியை செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங் சாய், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.



காளைகளுக்கு ஊக்க மருந்துகளோ, எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ செலுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், பாத்திரங்கள், கட்டில் பீரோ, சைக்கிள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...