கோவையில் இருசக்கர வாகன விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை சத்தி சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் நாகையைச் சேர்ந்த நாகேஸ்வரன் எனும் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: நாகப்பட்டினம் மாவட்டம் கமலா வீதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் நாகேஸ்வரன் (வயது32). இவர் கோவை கோவில்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நாகேஸ்வரன், தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் சாலை கோவில்பாளையத்திலிருந்து குரும்பபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குரும்பபாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட நாகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த கோவில்பாளையம் போலீசார், நாகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...