உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக..! - கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்ககோரி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் வெண்மணி, கோபால்சாமி, ஆறுமுகம், சுதா, லலிதா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், இந்திய உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தெந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டால்தான் மக்களுக்கு சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகத்தின் மாண்புகளும் சரியான புரிதலோடு சேரும் எனவும் அப்போதுதான் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...