கோவையில் கைக் குழந்தைக்கு அடைக்கலம் - போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு!

கோவையில் கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண்ணை காவலருக்கான நிழற்குடையில் அமர வைத்து, அவர் சாப்பிடும் வரையில் பெண்ணின் கைக்குழந்தையை வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலர் கிஷோர்குமாரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கைக்குழந்தை மற்றும் தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார்.

அப்போது, இளம் பெண் வெயிலின் தாக்கத்தால், அங்கிருந்த போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் வந்து நின்றார். இதையடுத்து, அவரது தாய் உணவு வாங்கச் சென்ற நிலையில், இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கிஷோர்குமார் (வயது27) வாங்கி கொண்டு, இளம் பெண்ணை அங்கிருந்த இருக்கை அமரக்கூறியதோடு தண்ணீர் வாங்கி கொடுத்துள்ளார்.



இதையடுத்து, அவரது தாய் வாங்கி வந்த உணவை சாப்பிடும் வரையிலும் குழந்தையை காவலர் கிஷோர்குமார் தூக்கி வைத்திருந்தார். பின்னர் அவர்கள் கிளம்பிய போது, குழந்தையை கொடுத்து பத்திரமாக செல்ல காவலர் கிஷோர்குமுர் அறிவுறுத்தினார். கடும் வேலைக்கு இடையே போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...