உடுமலையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் போக்சோவில் கைது!

மடத்துக்குளம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்து 4 மாத கர்ப்பமாக்கிய வீரமுத்து (23) மற்றும் தங்கராஜ் (29) ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 2 இளைஞர்களை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (23). ஓட்டுனராக பணியாற்றி வரும், இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பத்தாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வீரமுத்து, சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே இவர்களுக்கு இடையேயான தொடர்பு அவரது அக்கா கணவரான உடுமலை அடுத்த சர்க்கார்புதூரைச் சேர்ந்த தங்கராஜ்(29) என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தங்கராஜ் அவர்கள் இருவருக்குமான உறவை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு உட்படுத்தி உள்ளார்.

இருவரும் மாறி மாறி சிறுமியை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதில் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த சிறுமி பரிசோதனை மேற்கொண்டதில் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து தனது காதலனான வீரமுத்துவை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்டு உள்ளார். அதற்கு அவர் உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தகப்பன் அல்ல உனது அக்கா வீட்டுக்காரரை போய் கேள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த சிறுமி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வீரமுத்து மற்றும் தங்கராஜ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசை வார்த்தை கூறி காதலனும் உறவை தெரிந்து கொண்ட அக்கா வீட்டுக்காரரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...